“ ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு “
தானமும் தக்கத் தவமதும் சிக்கத் தர்மமே காக்க
ஞானமே மிக்கக் கானமே சொக்க நடுமுனை தூக்கப்
பக்கமே ஒக்கப் பொக்கமே புக்கப் பவமெலாம் போக்கக்
குக்குகூ கூகூ கூகு கூ குக்கூ குக்குகுக் கூகூ 20
விளக்கம் :
தானமும் தவமும் செய்துவர , அதனால் தர்மம் ஆகிய ஆன்மா நம்மை காத்து வர , அதன் பயனால் அறிவு ஓங்க , துளிர்த்து வர , நாதம் கிளம்ப , சுழிமுனை இயங்க , மேலான நல்லன எல்லாம் ஓங்க , பாவமெல்லாம் நசிந்து போக குயில் கூவுக
ஆகையால் தானம் மட்டுமே ஆகா
தவமும் வேணும் என்ற படி
நம் அன்பர் எப்படி ??
வெறும் சோறு போட்டு எல்லாம் கிடைக்கும் என நம்புகின்றார்
அது தான் சன்மார்க்கம் என் கிறார்
சிரிப்பு தானே
வெங்கடேஷ்
