திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “

“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 1616

விளக்கம்:

சுத்த சிவம் குணம் உரைத்தல்

1 தர்ம வழி நிற்பவன்

2 பிறப்பில்லாத பெருங்குணம் உடையவன்

 அவன் இருப்பிடம் காடு ஆகிய துவாத சாந்த பெருவெளி எனும் தில்லை வனம் – கடம்ப வனம் 

அது மும்மலக் காடு

3 அவன் உணவு பிச்சை எனில் ??

பிச்சைக்காரர் மாதிரி அரிசி கோதுமை அல்ல

விந்து தான் அவன் நம்மிடம் பிச்சை கேட்பது

4 அவன் எதனுடனும்  கலவாமலும் தனித்து நிற்கும் குணமாம் துறவு கொண்டவன்

யார் அந்த மாதிரி தனு கரண புவன போகம் துறக்கின்றாரோ, அவர்க்கு  மீண்டும் பிறவா நெறியாம் மரணமிலாப்பெருவாழ்வு அளிக்கும் பித்தன்

எல்லா சித்தியும் வழங்குபவன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s