“ தெய்வமும் ஆயுதமும் “

“ தெய்வமும் ஆயுதமும் “

உண்மை சம்பவம் Jan  2023

சென்ற மாதம் நான் சென்னை வந்திருந்த போது ஒரு அன்பருடன் நடந்த உரையாடல்

அவரிடம் நான் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை பெருமை பேசிக்கொண்டிருந்தேன்

அதில் இல்லா  வித்தை / விளக்கமே இலை எனவும் கூறினேன்

எனக்கு வரும் விஷனுக்கும் விளக்கம் அதில் இருந்து தான் எடுப்பேன் என்றேன்

ஒரு சமயம் –  கண்ணனின் அண்ணன் பலராமர் என் விஷனில் கலப்பையுடன் வந்தார்

எனக்கு புரியவிலை

நான் திருவாசகம் உரை பார்த்தேன்

அதில் கலப்பை கொண்டு சுழிமுனை   வாசல் திறக்கவேணும் என்றிருந்ததைப் படித்து அதிர்ந்து விட்டேன்

அவரும் : ஆமாம் – உண்மை தான்

வாராகி அம்மன் கையிலும் கலப்பை ஆயுதம் இருக்கு

இதை தான் சமயபுரம் கோவில் கோபுரத்தில் கண்டதாக கூறினார்

ஏன் ?? இவ்வாறு அமைத்துள்ளனர்

கலப்பை பூமி உழும் எந்திரம்

வாராகி – பன்றி முகம்

பன்றி நிலத்தை பிளந்து செல்லும் விலங்கு

ஆக ரெண்டும் ஒன்றாய்ப்போனது

ஆகையால் , யோகத்துக்கு வேண்டிய அனுபவத்துக்கு வர கலப்பை அவசியம்

நிலம் ஆகிய மூலத்தை பிளக்க ஆழ்ந்து செல்ல , ஒரு பயிற்சி இருக்கு

 நிலம் எனும் மூலத்தில் இருந்து தான் வாசி உருவாகுது

அதை உருவகப்படுத்த தெய்வமாக – வாராகி அம்மனும் ,

ஆயுதமாக கலப்பையும் உண்டாக்கி , அதை அம்மன் கையில் ஏற்றிவிட்டனர் நம் முன்னோர்

வாசி உருவாக்க விரும்புவோர் / பயிற்சி செய்வோர் வணங்க வேண்டிய தெய்வம் வாராகி அம்மன் என இதன் மூலம் தெளிவாகுது

இனி என்னிடம்  பயிற்சி கற்போரிடம் வாராகி அம்மனை வணங்கவும் என ஆலோசனை வழங்குவேன்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s