“ வள்ளல் பெருமானும் உலகமும் “
அருட்பா
மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
பரிந்தெனை அழிவிலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே. 4728
உலகர் :
சமய மத சண்டை – ஜாதி – அரசியல் – தலைவர் / சினிமா நடிகர் சண்டை – என நேரத்தை வீணே கழிக்கின்றார்
பொழுது போக்கு என நேரத்தை வீணாக்கிறார்
அப்படி கழிக்கையிலே , நானோ உன் பொற்பாதத்தில் – திருவடியில் என் மனதை வைத்து தவம் செய்தனன்
அதன் பயனால் எனக்கு நல்ல நிலையில் வைத்திட்டாய்
அழிவிலா பெரும் நிலைக்கு ஏற்றி வைத்தாய்
எனக்கு அது போதும் என் தவம் சித்தியானது
உலகம் கவனிக்க :
தான் தவம் செய்த தாகத் தான் பாடுகிறார்
பின் ஏன் சன்மார்க்கத்தில் தவமே இல்லை என கூறுகின்றது சன்மார்க்க ஜனம் ??
ஆக வள்ளல் பெருமான் தான் செய்த தவம் பலித்தது என தான் கூறினார்
வேறேதையும் கூறவிலை
அன்னதானம் – சோறு என
வெங்கடேஷ்