ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

1 வரநெறி யறியா வானரங்கள்

வாகடம் தேடி யலைவதுமேன்?

விளக்கம் :

உயிர் வரு வகை அறியாமல் இருக்கும் குரங்கு போல் இருக்கும் மனிதர்கள் – மருத்துவ நூல்களை தேடி முப்பு – ரசவாதம் என அலைவது ஏன் ??

2 புலநெறி யறியாப் புவிமாந்தர்

போக்கிடம் தேடிப் புலம்புவதேன்?

விளக்கம் :

ஐம்புலன் பணி – அடக்கும் விதம் முறை அறியாமல் இருக்கும் மக்கள் – மோட்சம் முத்தி என தேடி கிட்டாமல் அரற்றுவது ஏன் ?? 

3 உளநெறி யடக்கி யாண்டல்லோ

உயர்வன வாசத் துறவதெலாம்?

விளக்கம் :

மனதை அடக்கி தன் வசப்படுத்தினால் தானே ?? மேலான பர வாழ்வு சுகம் – பரத்துடன் தொடர்பு   எல்லாம்

4 வெறுநெறி விட்டால் வேதையெலாம்

வித்துக் குள்ளே விளையாடும் 27

விளக்கம் :

வீணான உலக வாழ்வு விட்டுவிட்டு , தவம் ஞானம் என வாழ்ந்தால் தான் எல்லா வித்தையும்அறிவும் விளங்கி அதன் சித்துகள் எல்லாம் கைவசம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s