திருமந்திரம் ஆறாம் தந்திரம் – துறவு
நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே 1617
விளக்கம்:
இறை அடைய சுத்த சிவம் ஒரு பெரும் சிவ நெறி உண்டாக்கி வைத்திருக்கு
அதை கடைபிடித்து ஒழுகினால் , நாம் இறவா நிலை அடைவோம்
மரணமிலாப்பெருவாழ்வு வாழ்வோம்
அதை விட்டு நீங்கினால் நெரு ஞ்சி முள் போல் சோதனைகள் துன்பம் இறை தந்து நினைவுபடுத்தும்
ஆனால் இதிலிருந்து நீங்காமல் நிற்பவர்க்கு இது நடக்காதாம்
வெங்கடேஷ்