“ ஐராவதம் – ஐராவதீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் “
ஐராவதம் : நம் புராணம் இது வெள்ளை யானை , தேவ லோகத்தில் இந்திரனிடத்தில் இருந்ததாக கூறுது
உலகில் எங்காவது வெள்ளை நிறத்தில் ஆனை இருக்குமா ??
ஆகையால் இது தத்துவ விளக்கம் தான்
உலக நோக்கில் இருக்கும் ஐம்புலங்களும் சுத்தம் ஆனக்கால் அது வெள்ளை ஆனை ஆகுது
ஐராவதம் :
ஐ ஆகிய கண் கொண்டு , இருளில் இருக்கும் மலத்தை வதம் செய்வதாகும்
இதுக்கு – இந்த பெரிய ஞான கர்மத்துக்கு இந்திரியங்கள் சுத்தமாக இருத்தல் அவசியம் ஆகையால் – இது வெள்ளை ஆனையாக கற்பிதம் செயப்பட்டிருக்கு
ஆனை மிகவும் பலம் வாய்ந்தது புலன் போல
அதனால் அதுக்கு உவமித்து சொல்லப்பட்டிருக்கு
இந்த மாதிரி வெள்ளை யானை பூஜிக்கும் ஆன்மா தான் ஐராவதீஸ்வரர்
ஆக இருளில் இருக்கும் ஒளி தான் ஆன்மா என தெளிவாகுது
வெங்கடேஷ்