திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருவடிப் பேறு
வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே. 1602
விளக்கம் :
இறையின் திருவடிகளை என் “ கண்ணிலும் “ மனதினுள்ளும் வைத்து தவம் செய்தேன்
அதன் பயனால் பொய் புலன் வழி போகா பெரு நெறி அனுபவம் பெற்றனன்
புலன் வாழ்க்கை பொய் வாழ்க்கை அது உலக வாழ்க்கை
மேலும் இரு வினைகள் மாற்றி , தீர்க்கும் துறை கண்டனன்
உண்மையான சிவான ந்தம் அறிந்தனன்
அது வேதத்தின் முடிவே விளங்கும் ஆன்மா ஆகுமே
வெங்கடேஷ்