ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு
வாசியெனும் பரியதனை யிழுத்து வாங்கி
வாயில்நடு வேசெலுத்தி மனைக்குள் ளேகி
மாசறியா வேசியுடன் மதசையோகம்
மாண்டானென்று றுலகத்தார் பாடை கட்ட
ஊசிவிழும் ஊனுடலும் சூக்க மாகி
உம்பருல கோடுறவாம் ககன மார்க்கத்
தேசொளியாம் சித்தாந்தத் திருவே கண்டீர்
செப்பரிதா மாகாய கமனம் கண்டீர் 70
விளக்கம் :
வாசி பிடித்து உச்சி மச்சு வீட்டில் செலுத்தி , அங்கு விளங்கும் ஆன்மாவுடன் கலந்தால் – அது சையோகம் என பேராம்
மாண்டு போகும் ஸ்தூல உடல் ஒளி உடலாகி , தேவர் உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தும்
சொல்வதுக்கு அரிதான மேலான பரபோகம் விளையும்
வெங்கடேஷ்