“ ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு “
சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர் 67
விளக்கம் :
சித்தர் பெருமக்கள் எல்ல உண்மை ரகசியம் தனை மறைத்துவிட்டார் என மக்கள் தப்பாக எண்ணலாகாது
சாதகர் சித்தர் நூல் படிக்க ஆரம்பித்தவுடன் எல்லா சித்தரும் அங்கு வந்து சுற்றி குழுமிவிடுவர்
சாதகர் தராதரம் பக்குவம் அருள் நிலை எல்லா பார்த்து உதவுவர்
அவர் எதிர்ப்பார்த்த அளவு இல்லை எனில் – விலகிவிடுவர்
சித்த சுத்தி – மன ஒருமை – ஐம்புலன் ஆளுமை உடையோர்க்கே வித்தை சித்தி ஆகும்
சித்தம் சிவமயம் ஆதல் சித்த சுத்தி
இதில் நிறைவு காணா மற்றவர்க்கு சந்தி சிரித்துவிடும்
வெங்கடேஷ்