திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு
கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே 1618
விளக்கம் :
கேடு தரும் வினைக்கூட்டம்
அதை தடுக்க நாம் செய வேண்டிய தவம் ஆகிய கடமை
வினைக்கூட்டுறவால் ஐம்புலனும் உலக நோக்கமாகி நின்ற வழி முறை , திருவடி துணையால் நான் அவ்வழி செல்லாமல் அவன் திருவடி பற்றி தவம் செயும் முறையும் வாழ்வும் அளித்தான் அண்ணலே
திருவடி பற்றி நின்றால் உலக வாழ்வு நசித்து போகும் என்றவாறு
பர உறவு தொடர்பு ஏற்படும்
வெங்கடேஷ்