திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – தவம்
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவத் தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே 1626
விளக்கம் :
பிறப்பு எதுக்கு என்பதை அறியா மாந்தர் – அது வாழ வேண்டி பல செலவம் பிச்சை ஆக வேண்டி பெறுவர்
ஆனால் தவம் செய்து திருவடி மறக்காமல் இருக்கும் தவத்தோர் பிறப்பினை நீக்கி கொள்வர்
அதன் பெருமை பெற்றோர் ஆவரே
வெங்கடேஷ்