மன நோயாளிகள்
உண்மை சம்பவம் – ஜனவரி 23
ஒருவர் அலைபேசியில்
உங்க பதிவு நல்லா இருக்கு
உங்களுக்கு அனுபவம் எப்படினு தெரியாது
உங்க உடம்பு எப்படி ??
மேனி சிவந்து போயிருக்கா ?? முடி வெளுத்துவிடவிலையே ??
அப்படி இருந்தாத் தான் நான் வந்து கத்துக்கொள்வேன்
நான் :
நீங்க எதிர்ப்பாக்கற அளவுக்கு எல்லாம் இல்லை
ஆனா நல்ல அனுபவத்தில் இருக்கேன் என்பது உண்மை
முடி வெளுத்துவிட்டது
வேறு சில உடல் மாற்றம் இருக்கு
அதை உங்களிடம் பகிர விருப்பமிலை
நீங்க +2 / கல்லூரி எவ்வளவு மதிப்பெண் ??
அவர் : +2 = 50%
கல்லூரி = 55 %
நான் : வேலை கொடுக்கிற எல்லா கம்பெனியும் , முதல் வகுப்பு 60% க்கு அதுக்கு மேல் distinction வாங்கியிருந்தால் மட்டும் தான்
வேலைனு சொல்லியிருந்தா , உங்க நிலை என்னவாகியிருக்கும் ??
அவர் கப்சிப் ஆகிவிட்டார்
நீங்க என்னிடம் கற்க வேணாம்
2 சிலர் : உங்களுக்கு நெற்றிக்கண் திறந்துவிட்டதா ??
நான் : இல்லை அதுக்கான பயிற்சி/முயற்சியில்
சில பல நல்ல அனுபவம் உளது
அது மற்றவர்க்கு புரியாது – சன்மார்க்க நெறி நிற்போர்க்கு தெரியும்
வாசி வரவே சுமார் 20 ஆண்டுகள் அதுக்கு பின்னும் 20ஆண்டுகள் ஆகும்
அவர் : உங்களுக்கு திறந்த பிறகு நான் வந்து கற்றுக்கொள்கிறேன்
ரொம்ப முற்றிய நிலை – திருத்த முடியாத பிறவி
தகவல் தொழில் நுட்பத்தில் பணி – தான் ரொம்ப ஸ்மார்ட் என எண்ணம்
அதாவது தான் ஏமாந்துவிடக்கூடாதாம் அதனால் தான் இவ்வாறாம்
அதாவது படிப்பதோ பாலர் நிலை கல்வி UKG /LKG – ஒரு அடிப்படை செய்தி கூட தெரியாது ஆனால் IIT / MIT பேராசிரியரிடம் தான் பாடம் கற்றுக்கொள்வாராம்
இவர்க்கு அடிப்படை அறிவு இல்லாமல் இப்படி எதிர்ப்பார்க்கிறார்
அது தான் பேராசை
இவரிடம் பேசி பயனிலை என எண்ணிக்கொண்டேன்
பல நிலைக்கு பலப்பல ஆசிரியர் பிரப ஞ்சம் அனுப்பி பாடம் நடத்தும்
3 தஞ்சை
இது இன்னும் ரொம்ப முத்தியது
எனக்கு 3ம் கண் திறந்துவிட்டது
ஆனால் மாயை காரணமாக மூடி இருக்கு இப்போது ?? எப்படி கதை ??
ஆகையால் எனக்கு குரு ஆக வரக்கூடியவர் வாயால் கற்றுத்தராமல், அவர் அருகே உட்கார்ந்த மட்டில் எல்லாம் ஞானம் விளக்கம் எனக்கு அளிக்க வேணும்
ஐயோ சாமி உனக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் . என்னை விட்டுடு என்றுவிட்டேன்
இது இருக்க வேண்டியது நம் சமூகம் அல்ல – சென்னை 10
இப்படி எல்லாம் இருக்கார் மன நோயாளிகள்
வெங்கடேஷ்