“ தற்போதவொழிவு பெருமை “
உண்மை சம்பவம் 2023
நான் தெரிந்த ஒருவனுக்கு தொழில் கடனாக பெருந்தொகை அளித்தேன்
எந்த உத்தரவாதம் பிணையும் இல்லாமல் கொடுத்துவிட்டேன்
அந்த பையன் வேலைக்காரன் – தொழில் தெரிந்தவன் கடுமையான உழைப்பாளி என்ற தகுதியில்
எனக்கு நன்கு பழக்கம் கூட
15 ஆண்டுகள் கடந்துவிட்டும் கொடுத்த கடன் திருப்பி அளிக்கவிலை
அவனுக்கு கஷ்டம் நட்டம் வந்து வெளி நாட்டுக்கு சென்று விட்டதாக அவன் நண்பர் தெரிவித்தார்
எவ்ளோ முயற்சித்தும் அவனை பார்க்க/ பேச முடியவிலை
அதனால் சென்ற வருடம் , தெய்வத்திடம் :
என் முயற்சிகள் தோல்வி கண்டது
இனி இது உன் பொறுப்பு
நீ என்ன செய்கிறாயோ ?? அதுக்கு நான் உடன்படுகிறேன் கட்டுப்படுகிறேன்
அது குறித்து யாதும் நான் சஞ்சலம் கொள்ள மாட்டேன் என அவனிடம் விட்டுவிட்டேன்
லாபமோ நட்டமோ கவலைப்பட மாட்டேன் என சன்னிதியில் உறுதி செய்தேன்
இந்த வருடம் கடன் திருப்பி அளித்துவிட்டான்
இது தான் தற்போதவொழிவின் பெருமை
வெங்கடேஷ்