ராஜாளியும் – காயகல்பமும்
ராஜாளி ஒரு வகை கழுகு
இந்த பறவைக்கு வயதாக மூப்பு ஏற , அதன் கொத்தும் அலகு வளைந்து போய் , இரை உண்ண முடியாது போம்
அதன் இறக்கைக்கும் வயதாகிப்போம்
அப்போது என்ன செயும்?
மலை உச்சிக்கு சென்று அதன் அலகை பாறையில் மோதி உடைத்துக்கொளும்
பின் புது அலகு முளைக்கும்
அது கொண்டு பழைய இறக்கைகளை தன் அலகால் பிய்த்து போடும்
பின் புதுசு முளைக்கும்
இப்போது அது முழுமையான புது பறவையாக மாறிவிட்டது
இப்போது வேட்டைக்கு சென்று உண்ணும்
இது தான் உண்மையான காயகல்பம் செயும் முறை துறை ஆம்
இதன் உட்பொருள் ??
கழுகு எதுக்கு பேர் போனது ??
எந்த விலங்கு ராமாயணத்து கதையில் ராமனுக்கு சீதை இருப்பிடம் சொன்னது ??
நீங்களே கண்டுபிடித்து கொளவும்
அதை வைத்து தான் காயகல்பம் செயணும் – செய்து கொளவும்
ஆகையால் இதை விடுத்து , உலகம் கூறும் வழி சென்றால் பற்பல உபாதைகள் தான்
வெங்கடேஷ்