சாபம்
உண்மை சம்பவம் – 2022
ஒருவர் தஞ்சை சேர்ந்தவர் – மின் பொறியாளர்
சித்த வைத்தியத்தில் நல்ல ஈடுபாடு
அவர் என்னிடம் பலப்பல சந்தேகம் கேட்டார்
நான் எனக்கு தெரிந்ததை கூறினேன்
ஆனா அவர் சித்த வைத்திய மருந்து – முப்பூ – சுண்ணம் என பலராமையா அடிப்படையாகக் கொண்டே கேட்டு வந்தார்
நான் பல முறை சித்த வைத்தியம் எனக்கு தெரியாது – எனக்கு முப்பூ மீது நம்பிக்கை கிடையா
அதை பத்தி கேட்க வேண்டாம்
மத்தவரிடம் கேட்கவும்
ஆனால் அதே திருப்பி திருப்பி கேட்க , சண்டை ஆகிவிட்டது
அளவுக்கு மீறி பேச விட்டார்
முப்பூ கொண்டு வள்ளலார் முத்தேக சித்தி அடைந்தார் என கூறும் முட்டாள்
அலைபேசியை துண்டித்த பின் , நான் மனதால் திட்டி விட்டேன் –
“ நீ உருப்படாமல் போவாய் “
பின்னர் விஷன் : அது சாபமாக மாறிவிட்டதாக காட்டியது
அதை பலப்பல காட்சிகளாய் காட்டியது
நான் சற்றும் எதிர்பாராதது
வியப்பு தான்
வெங்கடேஷ்