ஞானி இலக்கணம் – சிவவாக்கியர்
சுடரெழும்பும் சூட்சமுஞ் சுழுமுனையின் சூட்சமும்
அடரெழும்பி யேகமாக வமர்ந்துநின்ற சூட்சமுந்
திடரதான சூட்சமுந் திரியின்வாலை சூட்சமுங்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே 335
விளக்கம் :
ஆன்ம ஒளி உதயமாகும் இரகசியம்
அது தனிக் குமரியாக விளங்கும் இரகசியமும்
சுழிமுனை நாடி அதை அடையும் / இயக்கும் இரகசியமும்
வாலை – அவள் இருக்கும் இடம் இரகசியமும்
நாதம் கிளம்பும் இரகசியமும் ஆய்ந்து உண்மை கண்டு அறிந்தோன் ஞானியே
வெங்கடேஷ்