“ நந்தியும் திருவடி பயிற்சியும் “
ஊர் பெயர் – திருநெல்வாயில்; கோயில் – அரத்துறை. இத்தலம் தற்போது திருவரத்துறை, திருவட்டுறை என்றெல்லாம் வழங்குகிறது. நிவாநதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில்.
இந்த கோவில் விழுப்புரம் அருகே இருக்கு
நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது.
என்ன வியப்பு எனில் ??
நந்தியம்பெருமான் தலை திருப்பி பார்த்த மாதிரி அமைந்த நிலை
இவ்வாறாக நந்தியம்பெருமான் தலை நேராக லிங்கத்தை நோக்குவதாக அமைக்கப்படவிலை – சற்றே தலை சாய்ந்து திருப்பி தான் இருப்பதாக நான் சில கோவில்களில் பார்த்தேன்
இது சன்மார்க்க கண்ணாடி தவ பயிற்சி அப்படியே ஒத்துப்போவது தான் மிக்க வியப்பு அளிக்குது
கண்ணாடி தவத்தின் புற வெளிப்பாடு தான் இந்த அமைப்பு என் கருத இடம் இருக்கு
வெங்கடேஷ்