“ பிரம்மமும் – பிராமணனும் “ 2
பிரம்மம் எப்படி எந்த நிலையில் இருக்கு ??
நிகழ் காலத்தில் இருக்கு
நாளை பத்தி / நேற்று பற்றி கவலை இல்லாமல் இன்று இந்த ஷணம் பத்தி தான் கவனம்
அது மாதிரி தான் பிராமணனும் இருத்தல் வேணும்
பிரம்ம உபாசனையில் இருப்பவன் பிராமணன்
பிரம்ம அனுபவம் பெறும் முயற்சி தவத்தில் இருப்பவன் பிராமணன்
அத்தகையவன் பிரம்மம் இருக்கும் நிகழ் காலத்தில் வாழணும்
நாளைக்கென எதுவும் சேர்த்து வைத்துக்கொளக்கூடாது
இன்று பத்தி மட்டுமே யோசனை செய்ய வேணும்
சம்பாத்தியம் கூட இன்றைக்கு மட்டுமே
நாளைக்கென திட்டமிடல் கூடாவாம்
ரொம்ப கஷ்டம் கஷ்டம்
இதை நிரூபிக்கும் உண்மையான சம்பவம்
கோவை 2007
அப்போது தான் நான் கோவைக்கு மாறுதலாகி வந்த சமயம்
ஒருவர், குடும்பி , தெலுங்கர். யட்சிணி வசியம்
நான் முகம் பார்த்து சொல்வேன் என்றார்.
சரி என வீட்டிற்கு அழைத்து வந்தேன்
என்னை பத்தி சொன்னார்
லட்சுமி கடாட்சம் இருக்கு
காசு பூட்டி பூட்டி வைப்பாய்
மனைவி மூலம் அதிர்ஷ்டம் செழிப்பு என பலது கூறினார்
நான் சன்மானம் கொடுத்தேன்
இதை கேட்ட பக்கத்து ஃப்ளாட் மக்களும் சேர்ந்து அவரும் பார்த்தனர்
அவர்க்கு ரூ2000 வரை சம்பாத்தியம்
என்னிடம் , நான் இன்றைக்கு எவ்ளோ சம்பாதித்தாலும் , அதை இன்றே செலவு செய்தாகணும்.
இலையெனில் இந்த வசியக்கட்டு நீங்கிவிடும்
இப்படியாக இருக்கணும் பிராமணனும்
வெங்கடேஷ்