பக்குவம் அவசியம்
உண்மை சம்பவம் – கோவை 2007
அப்போது தான் நான் இங்கு பணிக்கு சேர்ந்திருந்த சமயம்
அப்போது மூத்தவர் ஒருவர் சுமார் 55 வயது
மிகுந்த பக்தி – சடங்கு ஆசாரம் பூஜை கோவில் விரதம் என வாழ்பவர்
என் கட்டுரைகள் படித்துவிட்டு நன்றாக இருக்கு என்பார்
சரி என நான் எழுதிய “ ஒழிவில் ஒடுக்கமும் சன்மார்க்கமும் “ எனும் நூலை அவர்க்கு கொடுத்து படிக்க சொன்னேன்
வாங்கி படித்தார்
வாங்கிய வேகத்திலே திருப்பிக்கொடுத்துவிட்டார்
என்னால் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது
இது பக்தி சடங்குக்கு எதிராக இருக்கு என குற்றம் சாட்டினார்
இது மிக மிக உயர்ந்த நூல் – புரிந்து கொள்ள பல காலம் ஆகும் என்று கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவிலை
ஞானம் அடைய பக்குவம் அடையணும்
சும்மா கிடைக்காது
வெங்கடேஷ்