திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – அருளினால் ஞானம் அடைதல்
முன்னின் றருளு முடிக்கின்ற காலத்து
நண்ணின் றுலகில் நடுவுயிராய் நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடு
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 1648
விளக்கம்:
தம் போதத்தை முன்னிறுத்தாது அருளை முன்னிறுத்தி தவம் செயும் ஆன்ம சாதகரது மலபரிபாகம் சத்தினிபாதம் காலம் வரும் சமயம் , அவர் உயிர்க்கு உயிராய் நின்று வினைகள் நீக்கி அருள்கின்றான்
பின்பும் அவர் தம் பிறவி துயரை நீக்கி , அவர்க்கு அருளை முன்னிறுத்தி ,அதனாலே உலக வாழ்வில் இருந்து விடுதலை அளித்தான்
வெங்கடேஷ்