திருவடி தவம் பெருமை – காந்தம்

திருவடி தவம் பெருமை – காந்தம்   எப்படி காந்தமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்துவிட்ட பொருளை கவர்ந்து இழுத்துக்கொள்கிறதோ ??     அப்படித் தான் ஆன்மாவானதும் குறிப்பிட்ட எல்லைக்கு மேலேறிய கண்ணை இழுத்துக் கொள்ளும்   காந்தம் இரும்பை இழுப்பது போல் விடாது பிடித்துக்கொண்டு இருக்கும்     வெங்கடேஷ்    

உலகமும் ஞானியரும்

உலகமும் ஞானியரும்   உலகம் : அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரியும்     ஞானி : விளக்கு மாதிரி தான் ஆன்ம சாதகனுக்கு பசி காமம் பெண் மோகம் –  போகம் அளவுக்கு அதிகமாகியும் உச்சத்துக்கு சென்றும் பின் அடங்கிவிடும்   இருக்குமிடம் இடம் இருந்த சுவடு தெரியாமல மறைந்து விடும்   அதுக்கு சாதனம் துணை நிற்கிறது     வெங்கடேஷ்  

திருமூலர்  ஞானம் – 2

திருமூலர்  ஞானம் – 2     சித்திக்கு முத்தி யெட்டு டுடனிரெண் டையும் அத்திக்கு மென்று அமுத்தை வாங்கி பத்திக்கு ளஞ்சை மவுனத்துட் டாக்கி யெத்திக்குஞ் சத்தி யிருந்ததைப் பாரே   பொருள் :   சித்தி என்பது 8/2  எட்டிரெண்டு  அனுபவம் முடித்த பிறகு ஆகும் இந்த ரெண்டையும் கூட்டினால் அமுதத்தை உண்ணலாம் ஐந்து இந்திரியங்களையும் புறத்திலிருந்து மீட்டு ,  மௌனத்துள் அடக்கணும்     வெங்கடேஷ்  

திருமூலர்  ஞானம் – 1

திருமூலர்  ஞானம் – 1   அமுதம் பெருமை   அமுதத்தை யீவா ளானந்தச் சோதி அமுதத்தைக் கொள்ள யார்க்கு மேலாய் அமுதத்தை கொள்ள யாரு மறியார் அமுதத்தை விட்டாலாகாது சித்தியே   பொருள்     நெற்றியில் இருக்கும் நாத சக்தியானது அமுதம் நல்கும் அது பருகுவோர் தேவர்க்கும் மனிதர்க்கும் மேலாக விளங்குவர்   அது பருகும் படிமுறை யாரும் அறியவிலை அமுதம் விட்டு மற்ற சாதனைகள் செய்தால் – காய சித்தி கிட்டாது  …

நாதம் பெருமை

நாதம் பெருமை   “ அடிக்கிற கை தான் அணைக்கும் “   நாதத்தின் குணத்தால் விந்து வெளியேறும் அதே நாதத்தால் விந்து கட்டுப்படும் விந்துற்பனம் நின்றுவிடும் மன விகாரம் நீங்கும் மன லயம் உண்டாகி பின் ஒடுங்கும் உறக்கம் ஒழியும்   இன்னும் பற்பல நன்மை உண்டாம்   வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் Aim at Stars You will land on Moon at least அது தான் நெற்றிக்கண் சுழுமுனை உச்சிக்கு இலக்கு வைத்தால் சுழுமுனை வாசலுக்காவது ஏற முடியும் அதை திறக்கவாவது முடியும் இது நிதர்சனம் வெங்கடேஷ்

உலகமும் ஞானியரும்

உலகமும் ஞானியரும் உலகம் : கதவைத் திற காற்று வரட்டும் ஞானி : கதவைத் திற வாசி ஏறட்டும் கதவைத் திற கற்பூர மணம் வீசட்டும் கதவைத் திற அருள் ஒளி பரவட்டும் வெங்கடேஷ்

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை   கற்பூரம் ஆகிய ஆன்ம ஒளி சாதனத்தில் வழி நடத்தும் போது அது எடுத்துரைக்கும் வழி – படிமுறைகள் வரப்போகும் அனுபவங்கள் புரிந்து கொண்டு மேலேற அதை தக்க வைத்துக்கொள்ள கற்பூர புத்தி இருப்பது அவசியம்     வெங்கடேஷ்  

முனையும் – உச்சியும்

முனையும் –  உச்சியும்   சூரியோதயம் அதன் அழகு காண வேணுமெனில் ஒன்று நாட்டின் கோடிக்கும் முனைக்கு செல்லணும் இல்லை ஏதாகினும் மலை உச்சிக்கு ஏறணும்   ஆனால் ஆன்ம சூரியனைக் காண மலை உச்சியும் – முனையாகிய சுழுமுனைக்கு ஏறித்தான் ஆகணும்   முனையும் உச்சியும் அகத்தில் ஒரே இடம் தான்     வெங்கடேஷ்

கருக்கொளும் குழியும் – கருக்கொளாக் குழியும்

கருக்கொளும் குழியும் – கருக்கொளாக் குழியும்   பெண் யோனியாம் கருக்கொளும் குழிக்கே ஆசை வைத்த மாந்தர் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும்   கரு நெல்லி பிடித்து கருக்கொளாக்குழிக்கு ஏறினோர் மீண்டும் வாரா நெறிக்கு ஆட்படுவார்   முன்னது  சிற்றின்ப யோனி   பின்னது பேரின்ப யோனி       வெங்கடேஷ்