“ இதிகாசம் பெருமை “

“ இதிகாசம் பெருமை “   இதிகாசம் வேறு  வரலாறு வேறு கரிகாலன் அணை கட்டினான் – வரலாறு ராஜ ராஜ சோழன் பெரிய கோவில் கட்டினான் வரலாறு ஆனால் இதிகாசமாம் பாரதமும் ராமாயணமும் வரலாறு அல்ல அது யோக ஞான அனுபவத்தின் வெளிப்பாடு உலக மக்களுக்கு எளிதாக ?? புரிய வைக்க இந்த ஏற்பாடு எக்காலத்துக்கும் அழியாமல் இந்த அனுபவம் வழிகாட்டவே இது கட்ட பொம்மன் பத்திய வாழ்க்கை வரலாற்றை சிவாஜி மூலம் சினிமா எடுத்து…

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம் மனம் போச்சு நினைவும் போச்சு மெய்ஞ்ஞான வீடதனில் மேவும் போதே.” விளக்கம் : தவம் சரியான திசையில் பாதையில் ஏற்படும் அனுபவத்தை சித்தர் எடுத்துரைக்கின்றார் அதாவது மெய்ஞ்ஞான வீடு பேறாம் அனுபவம் சித்திக்கும் பட்சத்தில் மனமும் நினைவும் இல்லாமல் போகும் என்றவாறு மனமும் சித்தமும் இருக்காது என் அனுபவமும் இதே தான் – கண்மணிகள் மேலேற மேலேற மனம் செயலற்று நிற்கும் சித்தம் சுத்தம் அடைந்தபடி இருக்கும்…

சிரிப்பு

சிரிப்பு சீரியல் ஜோதிடர் க மணி : என்னடா சீரியல் ஜோதிடரா ?? செந்தில் : ஆமாண்ணே – ஜோசியம் கத்துக்கிட்டேன் ஆரும் வந்து பார்க்கலே கேக்கலே வருமானம் இல்ல என்ன பண்றது? சீரியல் நடிக்க கூப்பிட்டாங்க – அதுவே பொழப்பா போச்சி இப்ப அதே சீரியல்ல வச்சி வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கேன்  எந்த எந்த சீரியல் எப்படி கதை போகும்னு கணிச்சி அதை யூ டியூப்ல போட்றேன் ‘அதை நிறைய பேர் பார்க்கறாய்ங்க நல்ல வருமானம் அண்ணே…

கிரிக்கெட்டில் ஞானம்

கிரிக்கெட்டில் ஞானம்  கிரிக்கெட்டில்  மூன்று Stumps மூன்று நாடிகள் சோம சூரியாக்கினி கலைகள் குறிப்பதாம் அதில் நாத விந்து கலந்திருப்பதாம் பந்தால் அது அசைந்தால் உடன் அது சப்தம் கொடுக்கும் மேலும் ஒளிவிடும் ஆட்டக்க்காரர் அவுட் என காட்டிக்கொடுக்கும் எப்படி ஒரு விளையாட்டில் கூட ஞானம் இருக்கு சிரிப்பாக இல்லை ?? வெங்கடேஷ்

ஆன்மாவும் அபெஜோதியும்

ஆன்மாவும் அபெஜோதியும் எப்படி ?? ஆன்ம ஒளியில்   மஞ்சள் வெண்மை நிறம் கலந்துளதோ ??  கேரள மக்கள் ஒணம் பண்டிகையின் போது அணியும் ஆடை வண்ணம் கவனித்தால் விளங்கும் ஆரை வரவேற்கிறார் ?? அப்படியே அபெஜோதி சிற்றம்பல சிதம்பர ஜோதியில் தத்பர ஜோதியும் சித்பர ஜோதியும் கலந்து நிற்கும் வெங்கடேஷ்

ஆரூரனும் போரூரனும்

ஆரூரனும் போரூரனும் முன்னவர் – திருவாரூர் தியாகராஜர் கோவில் கொள் ஆரூரன்  பெருமான் திருவாசகம் :  ஆரூர் அமர்ந்த அரசே போற்றி பின்னவர் – போரூர் அமர்ந்த முருகப்பெருமான்  கந்தசாமி கடவுள் வெங்கடேஷ்

“ கோடையும் கோடை மழையும் “

“ கோடையும் கோடை மழையும் “ கோடை வெப்பம் தாங்க முடியாத போது அந்த சமயத்து மழை எவ்வளவு இதமாக சுகமாக இருக்கும் ? அது போல் கோடை வெப்பத்துக்கு சமமான தீ வினைகள் தீர்த்து அருள் மழை பொழிந்து வினை தீர்த்து நமக்கு நிம்மதி அளிப்பதாகும் மௌனம் வினை களைவதாம் வெங்கடேஷ்

“ பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “

“ பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “ வள்ளல் பெருமான் உரை நடையில் “ மனதை சதா காலமும் சிற்சபையில் வைத்திருக்கப் பழகவும் அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப்   பழகவும் “    அப்படி எனில் பொற்சபை சிற்சபை என்பது நம் இரு கண்கள் அல்ல குமரி செல்வராஜ் உரைப்பது போல் அதே சமயம் – இரு பெட்டி அல்ல சத்திய ஞான சபையில் விளக்கியபடி அது சிவ வெளிகள் புருவ மத்திக்கு மேல்…

ஆன்ம அனுபவம்  – திருப்போரூர்‌ சன்னிதிமுறை மாலை

ஆன்ம அனுபவம்  – திருப்போரூர்‌ சன்னிதிமுறை மாலை “அஞ்ஞான வல்லிருள்போய்‌ அன்பர் குணக்குன்‌ றின்மிசை மெய்ஞ்ஞான பானுவெளி தோன்றச்‌ – செஞ்ஞான நாதத்தொலி கூவும்‌ நற்கொடிப்‌ போரூரன்‌ இரு பாதத்தை நெஞ்சே பணி”  65 விளக்கம் : வெட்டவெளி எனும் குன்றின் மீது ஞான சூரியன் உதிக்கவும் அதில்  நாதம் ஒலிக்கவும் , அதனால் மும்மல இருள் அகலவும் திருப்போரூர் அமர்ந்த குமரன் இணையடி பணிவாய் தொழுவாய் நெஞ்சமே  வெங்கடேஷ்