ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2

ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2 திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி என் பொன்மணியை எய்த வொண்ணாதே அன்போடு உருகி = நாம் சாதனையில் இரு கண்களையும் இணைத்து பயிற்சி செய்தால் அதனால் மனம் காணாமல் போய், அகம் குழையும் உருகும் அன்பு என்பது , உலக நோக்கில் – ஒருவருக்கு செய்யும் உதவி, ஒருவருக்கு காட்டும் கரிசனம் – கணவன் மனைவி இடையே இருக்கும் காதல், தந்தை தன்…

ஜீவப்பிரம்ம ஐக்கியம்

ஜீவப்பிரம்ம ஐக்கியம் சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம் அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே – அழுக்கு போக தினம் குளித்து அழுக்கு நீங்கப் பெறாதவர்களே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் = அழுக்கு எங்கிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் = இடத்தை தெரிந்து அழுக்கு…

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் காலனுமில்லை கதவுன் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவான் பரானந்தி ஆணை மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் – இடகலையும் பிங்கலையும் ஒன்றாக சுழிமுனை நாடியில் செலுத்தினால் காலனுமில்லை கதவும் திறந்திடும் = எம பயமில்லை – பிரமரந்திரப் புழையும் திறந்துவிடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் =…

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம் ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும் வென்றவன் தன் வீரமே வீரம் – ஒன்றானும் சாகாமல் கற்பதே வித்தை – தனைப் பிறன் ஏவாமல் உண்பதே ஊண் ஒன்றாகக் காண்பதே = கண்கள் இரண்டாக இருப்பதால் நாம் எல்லோரும் ரெட்டையில் வாழ்கின்றோம் – இருள்/வெளிச்சம் – இன்பம்/துன்பம் – வெற்றி/தோல்வி இன்னும் இருமையில் வாழ்கின்றோம் இரு கண்களையும் ஒன்றாக்கினால் இன்ப துன்பம் – இரவுபகல் என்பதே இல்லை இதனையே இங்கு இரு…

பைபிளில் – ஞானம்

பைபிளில் – ஞானம் I If thine eye be single – your body shall be full of light – Mathew இதன் தமிழாக்கம் என்னவெனில் : உங்கள் கண்கள் ஒன்றாக இருக்குமானால் , உங்கள் சரீரம் முழுதும் ஒளிமயமாய் இருக்கும் இதன் அருத்தம் என்னவெனில் : சாதனையால் நம் இரண்டு கண்களையும் உள்முகமாக திருப்பி , புருவ மத்தியில் சேர்த்து ஒன்றாக்கினால் – அந்த அனுபவம் தான் – அர்த்தனாரீஸ்வரர் ஆகும்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ்சோதி ( 220 ) நம் உடலானது தொண்ணூற்றாறு தத்துவங்களால் செயல்படுகிறது இதில் புறக் கருவிகள் – 60 ஆகவும் அகக் கருவிகள் – 36 ஆகவும் விளங்கும் இதில் 36 தத்துவங்கள் தான் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை – அவைகளை நாம் களைதலே – வள்ளல் பெருமான் ” தத்துவ வெற்றி ” என்று புகழ்கின்றார் திருவடிகள் கொண்டு சாதனம் செய்யுங்கால்…

உண்மையான பிராணாயாமம் – எது???

உண்மையான பிராணாயாமம் – எது??? நம்மில் நிறைய பேர் அதிகாலையில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்கின்றோம் . எப்படி ?? கைவிரல்களை மூக்கில் வைத்து , ஒரு துவாரம் வழியாக மூச்சு உள்ளிழுத்து மற்றொறு துவாரம் வழியாக வெளியே விடுகின்றோம் – இது தான் பிராணாயாமம் என்று நம்பிக்கை வைத்து செய்து வருகின்றோம் இதற்கு மதிப்பு கூட்டும் வகையில் – மூச்சு உள்ளிழுப்பதற்கு ஒரு மாத்திரை நேரம் = உள்ளே நிற்க வைக்க இவ்வளவு நேரம்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செபியசிவமே ( 970 ) உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக = எல்லா ஜீவர்களையும் ஜீவர்களாகவும், வெவ்வேறு உடல் மற்றும் கருவி கரணங்கள் கூடியவர்களாக பிரித்து வேற்றுமைப்படுத்தி நோக்காமல் , “ ஆன்மா என்னும் பொதுமை மற்றும் ஒருமை நோக்கத்தோடு “ பார்க்கவும் செயிரெலாம் விடுக = மற்ற எல்லா எதிர்மறையானவைகளை விட்டுவிடுக சாதாரண ஜீவர்கள் நிலை – இருமை நிலை – இரவு…

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ???

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ??? சமய மதங்களிலும் தான் எதுவானாலும் சடங்காகி மாறி விட்டது – எந்த ஒரு பண்டிகை – திருவிழா வானாலும் அதன் உட்கருத்து தெரியாமல் வெறும் சடங்காகவே செய்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை அந்த நோய் இப்போது சன்மார்க்கத்திலும் பரவி வருகின்றது I சன்மார்க்க சங்கத்தவர் அனேகர் வெள்ளை ஆடை உடுத்துகின்றனர் – மகிழ்ச்சி தான் வருத்தம் என்ன வென்றால் – எதற்கு வெள்ளை ஆடை என்றால் விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்…