வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ??

வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ?? வள்ளலாரின் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவில்ல – அவர் கூறினார் தயவு தான் என்னை ஏறா நிலைக்கு மேல் ஏற்றியது – அது தான் எல்லா அனுபவத்துக்கும் அடிப்படையாக அமைந்தது – அதனால் சமய மதங்களால் அடைய முடியாத நிலைகள் எல்லாம் நான் கண்டேன் அனுபவித்தேன் என்றார் இங்கு தயவு என்று வள்ளலார் குறிப்பிடுவது ” ஆன்மாவைத் தான் அல்லாது வேறெதுவுமில்லை ” என்பதை எல்லா சன்மார்க்க…

ஔவைக் குறள் – 7

ஔவைக் குறள் – 7 குரு வழி 1. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிரிவற்றிருக்கும் சிவம் திரண்ட கருத்து : ஒரு உண்மையான சத்திய நெறியில் நிற்கும் குரு வந்து வழி காட்டினால் சிவம் நம் எண்ணத்தை விட்டு நீங்காது கலந்து நிற்கும் 2. நல்லன நூல் பல கற்பினும் காண்பரிதே எல்லையில்லாத சிவம் திரண்ட கருத்து : அனேக நூல்கள் – வேத சாஸ்திரங்கள் – உபனிஷத்துகள் – ஆகமங்கள் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாலும்…

ஔவைக் குறள் – 6

ஔவைக் குறள் – 6 அங்கியில் பஞ்சு துரியமும் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு திரண்ட கருத்து : துரியமும் கடந்த நிலையில் ஆன்மப் பேரொளி விளங்குகின்றது – அந்த அனுபவம் சித்தித்தால் – ஆன்மாவைக் கண்ணாரக் கண்டால் – மரணம் இல்லா நிலையும் – விடுதலை என்னும் முத்திப்பேறும் வீடுபேறும் கிடைக்கும் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh

ஔவைக் குறள் – 5

ஔவைக் குறள் – 5 மெய் நெறி 1. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையும் சொல்லும் மவுனத் தொழில் திரண்ட கருத்து : முக்காலத்தையும் – இறந்த காலம் – நிகழ் காலம் – வருங்காலம் ஆகிய மூன்றையும் மவுனம் முன்னரே தெரிவிக்கும் வல்லமை படைத்தது 2. அடைத்திட்ட வாசல் மேல் மனம் வைத்து படைத்தவன் தன்னையே பார் அடைத்திட்ட வாசல் – சுழிமுனையில் இருக்கும் அடைப்பு = பிரம்மரந்திரம் – பிரம்ம வாசல் – பிரமப்…

ஔவைக் குறள் – 4

ஔவைக் குறள் – 4 அறம் – பொருள்- இன்பம் – வீடு – விளக்கம் ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும் அன்பு பயின்று காதல் கொண்டதே இன்பம் பரமனை நினைந்து இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடு விளக்கம் : பிறர்க்கு கொடுத்தல் உதவுதல் என்பது அறம் தருமம் ஆகும் தீய வழியில் இல்லாமல் தரும நற்கருமங்கள் மூலம் ஈட்டுதல் பொருள் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் கருத்து ஒரிமித்து அன்பு செய்து…

ஔவைக் குறள் – விளக்கம் 3

ஔவைக் குறள் – விளக்கம் 3 அமுத தாரணை அமுதத்தின் அவசியமும் பெருமையும் 1. ஈரெண்கலையில் நிறைந்த அமிர்துண்ணில் பூரணமாகும் பொலிந்து 2 ஓங்காரமான கலசத்து அமிர்துண்ணில் போங்காலமில்லைப் புரிந்து 3. மேலைஅமிர்தை விளங்காமல் தானுண்ணில் காலனை வஞ்சிக்கலாம் விளக்கம் : சோமசூரியாக்கினிக் கலைகள் கலப்பினால் உண்டாகும் அமிர்தம் பற்றி இக்குறள் பேசுகிறது – இச்சாதனையால் இந்த அமிர்தம் சுழிமுனை வழியாக உடலுக்குள் இறங்கும் – அவ்வாறு இறங்கினால் ஏற்படும் அனுபவங்களைப் பற்றி இக்குறள் விளக்குகின்றது 1.…

ஔவைக் குறள் – விளக்கம்

ஔவைக் குறள் – விளக்கம் 1. பிறப்பின் நிலை பரமாய சத்தியுட் பஞ்சமா பூதம் தரமாறிற் தோன்றும் பிறப்பு விளக்கம் : பஞ்ச பூதங்களாவன – நிலம் , நீர் , கனல் , காற்று , ஆகாயம் ஆகியவைகளின் கூட்டு கலவை ஒரு கணக்கில் – அளவில் இருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி ஆகும் – இந்த கூட்டுக் கலவை , உதாரணமாக – 1/2, 1/4 , 1/8 , 1/16 எல்லாம்…

ஆறாம் திருமுறை – திருவருட்பேறு – 2

ஆறாம் திருமுறை திருவருட்பேறு பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது நீ பெறுக என அது திறக்கும் திறவுகோலும் எட்டிரண்டும் தெரியாதேன் என் கையில் கொடுத்தீர் இது தருணம் திறந்ததனை எடுக்க முயல்கின்றேன் அட்டிசெய்ய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் அரைக்கணத்துக்கு ஆயிரங்கோடி ஆக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே 1பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது – இது தலையைக் குறிக்கின்றது ( தலையினுள் இருக்கும் சுழிமுனை அடைப்பைக் குறிக்கின்றது…

ஆறாம் திருமுறை – திருவருட்பேறு

ஆறாம் திருமுறை – திருவருட்பேறு 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரமனடம் புரியும் பதியை அடைவித்தீர் அப்பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறைந்த மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர் அக்கோயிலிலே கோபுரவாயிலிலே செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டி திரும்பவும் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் அடிகள் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் – 36 தத்துவப் படிகளைக் கடக்கச் செய்தீர் 2 பரமனடம்…