காகபுஜண்டர்  1000

காகபுஜண்டர்  1000 தீத்தீதீ என்று சொன்னாற் சுடாதுதீயே தீயாகுஞ் சொல்பிறந்தால் யோகமென்றால் தீத்தீதீ யோகத்தீ மூலத்தீயே செந்தீயோ என்றாலே பஞ்சதீயே தீத்தீதீ உள்ளத்தீ மூலத்தீயும் சேர்ந்துவிட ஆறாகும் யோகத்தீயே தீத்தீதீ சுட்டுவிடும் உடலாங்காட்டை *திருவருளே லெகுவாகும் யோகத்தாட்டே. விளக்கம் : தீ தீ என கூறினால் சுடாது தீ என்றால் அது யோகமுறையில் பல தீ உள மூலத்து எழும் தீ தான் மூலாக்கினி செம்மையான தீ ஆகும் பஞ்சேந்திரிய ஒளிகளாம் இவைகள் ஒன்று சேர்ந்தால் ஆறாகும்…

வித்தியாசமான சாலை குழு அன்பர்

வித்தியாசமான சாலை குழு அன்பர் இவர்  நெல்லை சேர்ந்தவர் நடுத்தர வயது என் வலை படித்து , பதிவு பிடித்து , என்னை கோவையில் என் வீட்டில் சந்தித்தார் இவர் பல குழுக்களில் சேர்ந்து பயின்றுளார் சாலை , ஓஷோ , Pranic Healing , சித்த வித்தை , மன வளக்கலை என பல இவர் கூறிய ஒரு  விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது நான் மேலோட்டமாக என் பயிற்சி விவரம் கூறினேன் அதில் வரும்…

ஒளி தேக சித்தி – 2

ஒளி தேக சித்தி – 2 எப்படி ?? ரிலையன்ச் அதிபர் திருபாய் அம்பானி உயிருடன்  இருந்த போது  சொத்து மதிப்பு சில ஆயிரம்  கோடி இப்போது அவர் மகன் முகேஷ்  அம்பானி தலைமையில் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடி ஆகிவிட்டது இதை அவர் மகன்கள் இன்னும் பெருக்குவர் இது தலைமுறை தலைமுறையாக நடக்கும் இது மாதிரி தான் ஒரு ஆன்ம சாதகன் பல பிறவிகளில்  செய்த தவம் ,  புண்ணியம் தானம்…

“ நம் வாழ்க்கையும் – சினிமாவும் “

“ நம் வாழ்க்கையும் – சினிமாவும் “ சினிமா : ஒரு வரி கதை தான் ஆனால் அதை மூன்று மணி  நேரத்துக்கு காட்டுகிறார் யோகாப்பியாசம் : வாசி – ஒரு வரியில் கூறிவிடலாம் கோரக்கர் மாதிரி ஆனால் அனுபவத்துக்கு வர 20  ஆண்டுகள் கடின அர்ப்பணிப்பு உழைப்பு கூடிய தவம் தேவை சரியான முறையில் யார் ஆற்றுகிறார்?? வெங்கடேஷ்

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “ மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.    விளக்கம் : கலங்கிய  நீர் ஒக்கும் மனிதர் தம் மனம் தெளிவில்லாததால் இறைவன் யார் , அவன் தன்மை அறிகிலார் குளத்து  நீர்  தனியே எடுத்து வைத்து , தெளிய வைத்து ,பின்னர் குடிக்க பயன்படுத்தல் போல் , சாதகர் சிந்தை யாவும் தவத்தால் சிவமே  நிரம்பி ,…

“ வாசி – ரத்தினச் சுருக்கம் “

“ வாசி – ரத்தினச் சுருக்கம் “    கோரக்கர் சந்திர ரேகை “ குடியிருந்த வீட்டுக்குள் மூச்சைத் தாக்கிக் குறிப்பாகப் பூரணத்தின் மையம் ஏற்றே.கோரக்கர் சந்திர ரேகை விளக்கம் : சாதகன் குடியிருக்கும் பிரணவ வீட்டினுள் சுவாசத்தை வைத்து பூட்டைத் தாக்கி உடைத்து திறந்து உச்சிக்கு ஏற்றுவாயாக இது ஒரு வரி தான் ஆனால் இதை   நடைமுறைப்படுத்துவதுக்கு 20 ஆண்டுகள் தேவை வெங்கடேஷ்  

“ பிரபஞ்சம் எப்படி ?? “

“ பிரபஞ்சம் எப்படி ?? “ எனில் ?? தான் எண்ணியதை ஆன்ம சாதகன் வாயில் இருந்தே வரவழைத்து அதை நடத்திக் காட்டும் அவன் வாயில் தானாக வருவதையும் அவன் பிரார்த்தனை விண்ணப்பத்தையும் நிறைவேத்தும் தன் எண்ணத்தையும்  நிறைவேத்திக் கொளும் அவன் எண்ணத்தையும் நிறைவேற்றும் இருவருக்கும் வெற்றி தான் வெங்கடேஷ்

பக்குவம் அடைதல் ??

பக்குவம் அடைதல் ?? ஒரு காய்  ஐம்பூத செயல்பாட்டினால்  கனி ஆவது போல் காயாக இருக்கும் ஜீவனும் ஐம்பூதக் கலப்பினால் பக்குவம் அடையும் அதுவும் அந்த ஐந்தும் ஒரே இடத்தில் கலக்கும் போது உண்டாகும் வெங்கடேஷ்

“ அகமும் புறமும் “

“ அகமும் புறமும் “ ஜலதோஷத்தால் மூக்கடைப்பு உண்டாகில் வாசனை  நறுமணம் நுகரமுடியாது மும்மல தோஷத்தால் மணி நாசி அடைப்பதனால் ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை / கற்பூர மணம்  வாசம் நுகரமுடியாது வெங்கடேஷ்