நிதர்சனம்

 நிதர்சனம்

எப்படி ஒரு இரு சக்கர வண்டி

நாள் ஆக ஆக

இண்டிகேட்டர் பல்பு உடைந்திருக்கும்

வேகம் / எரிபொருள் காட்டும்  கருவி பழுது ஆகி வேலை செயாது

ஆனாலும் நாம் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பது மாதிரி தான்

நம் உடலும்

சில பல உறுப்புகள் பழுதானாலும்

உடல் இயங்கிக்கொண்டு தான் இருக்கும்

கண்ணுக்கு கண்ணாடி

காதுக்கு கேட்கும் கருவி

இரத்த அழுத்தம் சுகர்க்கு மாத்திரை மாதிரி ஏற்பாடு செய்து வண்டி ஓடும்

பல காலம் கழித்து வண்டி பழுதாகி பழைய இரும்புக்கடைக்கு போல்

உடல் சுடுகாடு  அடையும்

வெங்கடேஷ்

Leave a comment