“ பாதுகாப்பு பெட்டகமும் – அறிவுப் பெட்டகமும் “
பாதுகாப்பு பெட்டகம் வங்கி லாக்கர்
அதில் பாதுகாக்கப்படும் நகைகள் தங்கம் வெள்ளி
இது மிக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்
வெளியே காவலாளி இருப்பார்
அதி நவீன உபகரணம் பாதுகாக்கும்
இதை திறக்கலாம் மூடலாம் எலாம் செயலாம்
இது திறப்பதுக்கு சாவி மட்டும் தான் வேணும்
மேல் எப்படியோ ??
அதே மாதிரி தான் கீழும்
அறிவுப் பெட்டகம்
இது கூட மிக மிக ஆழமான இடத்தில்
மிகுந்த பாதுகாப்பான இடத்தில் இயற்கை வைத்திருக்கு
காப்பாற்றியும் வருது
1008இதழ்த் தாமரை நடுவே ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கு
இங்கு ஆன்மா ஆகிய செல்வம் தான் இருக்கு வேறிலை
இதை ஒரு முறை திறந்துவிட்டால் மூடவே முடியாது
இதை திறப்பதுக்கும் விந்து ஆகிய செல்வம் தான் வேணும்
சாவியால் முடியாது
விந்து தான் சாவி
அறிவுப் பெட்டகத்துக்கு மதிப்பு மிக மிக அதிகம்
உலகம் அறிந்து கொளவிலை
என் செய ??
வெங்கடேஷ்