கோரக்கர் சந்திர ரேகை
சிதாகாயம்- யோக அமுதம்- பெருவெளி
கோரக்கர் சந்திர ரேகை
நீங்காமல் இருத்திப்பார் நிலைதான் தோணும்
நிரஞ்சனமாய்ச் சிதாகாய வடிவே வட்டம்
பாங்காகப் பரிதி மதி பாய்ந்து ஓடாது
பம்பரம்போல் சுழன்று உடற்குள்ளே நிற்கும்
மாங்காயின் பாலூறல் உண்டு மைந்தா
மலைமீதில் ஏறி மனம் மயங்கிடாமல்
தூங்காமல் தூங்கிச் சுழிமுனையை நாடித்
தூபம் எனும் பெருவெளியைக் கண்டு தேரே.
பொருள் :
சுழுமுனை உச்சி தவம் அனுபவம் பத்திய பாடல் இது
அதாவது
தூங்காத தூக்கம் எனும் தவம் யோக நித்திரையால் , உச்சியில் மனம் வைத்து , ஆட்டம் அசைவு ஒழித்து , அமுதம் உண்டு – பெருவெளி எனும் வெட்ட வெளி காண்பாயே
வெங்கடேஷ்