தெளிவு – பாகம் 5

தெளிவு – பாகம் 5 திருப்பாவை = திரு + பாவை திருவெம்பாவை = திரு + எம் + பாவை அதாவது கண்மணி ஆகிய பாவையில் திருவாகிய ஜீவ ஒளி கலந்து இருப்பதால் – அது ஆன்மா நோக்கி தவம் இருந்து , அதை அடைவதுக்கு ஏங்கும் திருப்பாடல்கள் தான் இந்த தெய்வப்பாசுரங்கள் வெங்கடேஷ்

ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யம் என்பது ஜீவஇரக்கம் . ஒரு ஜீவனிடத்து இரக்கம் வெளிப்பட வேண்டுமெனில் மனம் மென்மை பெற்றிருக்க வேண்டும். மென்மை தொடர்ந்து இருக்க வேண்டுமெனில் வளமும் நலமும் நிறைந்த கருத்துக்கள் ஜீவஅறிவில் ஓங்கி இருக்கவேண்டும். அதற்கு அறிவு ஒருமை பெற்று விளங்கவேண்டும். ஒருமைக்கு சாதனமே முதல். மேலும் பசியாற்றுவித்தல் மட்டுமே ஜீவகாருண்யம் ஆகாது. பசியாற்றுவித்தல் ஜீவகாருண்யத்தின் குறைந்தபட்ச வெளிப்பாடு அவ்வளவே. ஜீவகாருண்யத்தின் உச்சத்தை தொடவேண்டுமெனில் அகத்தை நோக்கி திரும்ப (திருந்த) வேண்டும். அகத்தை நோக்கி திரும்புதற்கு தம் ஜீவனிடத்தும்…

என் அனுபவங்கள் – 2018

என் அனுபவங்கள் – 2018 மிகவும் கஷ்டப்பட்டும் பல்லாண்டுகள் கடின உழைப்புக்குப் பின்னும் நொந்து நூடுல்சாகியும் திருப்பதி ( திருமலையின் அடிவாரம் ) வந்துவிட்டேன் வாசல் திறந்து திருமலை ஏற வேண்டியது தான் பாக்கி ஏறி முடித்தால் “பாலாஜி”யாம் முருகனை தரிசனம் முடிப்பேன் ஆன்ம தரிசனம் முடிப்பேன் மேட்டுப்பாளையம் வந்துவிட்டேன் வாசல் திறந்து மேலேறி ஊட்டிக்கு போக வேண்டியது தான் பாக்கி ஏறிமுடித்தால் சந்திரமண்டல அனுபவம் அமுதம் தண்ணமுதம் தான் மாங்காய்ப்பால் அருந்த வேண்டியது தான் எப்போது…

நகைச்சுவையானது – வேடிக்கையானது

நகைச்சுவையானது – வேடிக்கையானது ஒருவன் தன் வாழ்வே தன் எண்ணப்படி தன் விருப்பபடி எதுவும் நடவாத போது டிவி சீரியல் மட்டும் தன் எண்ணப்படி தன் விருப்பபடி நடக்க ஆசைப்படுவதும் அப்படி நடக்காத போது அதுக்கு வருத்தப்படுவதும் வெங்கடேஷ்

” நிஜம் நிழலானது “

” நிஜம் நிழலானது ” நிழல் தான் நிஜமாகும் – ஆனால் இங்கு ” நிஜம் நிழலானது ” பாருங்கள் நிழல் மந்திரிகுமாரி படத்தில் வில்லன் மனைவி அவனை மலை உச்சிக்கு கூட்டிச்சென்று , அங்கிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவாள் பிரபல பாடலும் ஒன்று உண்டு இந்த காட்சியின் போது இது நிஜத்தின் வெளிப்பாடு ஆகும் நிஜத்தில் சாதகன் மனதை சுழுமுனை மலைக்கு , துரிய மலைக்கு கூட்டிச்சென்று , திருவடி கொண்டு , அதை அடக்கி…

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் குப்பனும் சுப்பனும் உலக வாழ்வில் தோய்ந்திருப்பர் சிறிது நேரம் மீண்டு ஒரு மணி நேரம் தவ வாழ்வுக்கு வருவர் கண் மூடி தியானம் செய்வர் ஞானி தவ வாழ்வில் இருப்பான் கண் திறந்து தவம் செய்வான் சிறிது நேரம் மீண்டு உலக வாழ்வுக்கு வருவான் முன்னவன் தற்போதம் முன்னிறுத்துவான் மோசம் போவான் பின்னவன் திருவடி முன்னிறுத்துவான் அருள் பெறுவான் முன்னவன் சுடுகாடு போவான் வெந்து நீறாவான் பின்னவன் திருச்சிற்றம்பலம் புகுவான் திருவடி சேர்வான் ரெண்டுக்கும்…

” சன்மார்க்கத்தாரும் அரசு ஊழியரும் “

” சன்மார்க்கத்தாரும் அரசு ஊழியரும் ” அரசு ஊழியர் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது போல் வேலைக்கு வருவதால் சம்பளம் வேண்டும் வேலை செய்வதுக்கு கிம்பளம் கையூட்டு வேண்டும் இது நிதர்ஸன உண்மை சன்மார்க்கத்தார் ஒரு சாதனமும் செய்யாமல் எல்லாம் பெற்றிட நினைக்கிறார் முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு வெறும் சோறு போட்டே எல்லாம் பெற்றிட நினைக்கிறார் அபே ஜோதி மகாமந்திரம் கூறி கூறியே எல்லாம் அடைந்திட நினைக்கிறார் இது நடக்கக் கூடிய காரியமா ?? அபே ஜோதி…

என் கனவு

என் கனவு ஒற்றைக்காலில் நின்று ( சுழுமுனை ) ஒருமையில் அந்த ஒருவனை நினைந்தேன் ஆகவனியம் மூலாக்னி வளர்த்தான் வாசிப்படகு ஏறி இலங்கை அடைந்தேன் சருகுகளாய் உதிர்ந்தனர் 36வறும் வினைகள் நாசமாயின திரைகள் விலகின எரிந்தன மலங்கள் என்னைக் கண்டேன் நான் கனிந்தேன் அதனுடன் கலந்தேன் நான் அவன் ஆனேன் எப்போது இது நடக்கும் ?? அறியேனே ?? திருவுளம் அறியேனே அ பெ ஜோதி என்னரசே வெங்கடேஷ்

இரட்டையர் – Twins

இரட்டையர் – Twins 1 ஒரு தாய் வயிற்றில் இரட்டைக்கரு உருவானால் ஒன்று எல்லா சத்தும் உருஞ்சி அசுர வளர்ச்சி காணும் ஒன்று அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்றதுக்கு இடமிலாமல் நசுக்கிவிடும் 2 இது போல் ஜீவன் மனமும் இயற்கையின் ரெட்டைக் குழந்தைகள் மனம் எல்லாம் அனுபவிக்குது ஜீவன் அடங்கி இருக்குது மனம் ஆட்சி செய்யுது ஜீவன் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கு மனம் அடங்கில் ஜீவன் ஆட்சி செய்யும் 3 நம் வாழ்வில் அருளும் பொருளும்…