தன் நிலை விளக்கம் – 7
சற்றே பெரிய்ய்ய்ய பதிவு – பொறுமையுடன் படிக்கவும்
உண்மைச் சம்பவங்கள் – கோவை
2015
நான் இந்த ஆண்டில் தான் என் வலை 1008petallotus.wordpress.comஆரம்பித்தேன்
என் பதிவுகள் பல வலைகளில் ஏற்கப்படாததால் – குறிப்பாக வள்ளலார் இணைய தளம்
அதில் ஒரே நாளில் 120 பதிவுகள் ஏற்றம் செய்தேன்
அதை ஒரு குழு உறுப்பினர் – செல்வராஜ் குழு உறுப்பினர்கள் படித்துவிட்டு , என்னைப் பாராட்டி – என்னிடம் சில சந்தேகங்களை எழுப்பி – என்னை சோதித்துப்பார்த்தார்கள் – நான் அந்த தேர்வில் வெற்றி பெற்றேன்
பின் அவர்கள் என்னை வடலூரில் சந்தித்து – பின் கோவை வந்து ( 8 பேர் கொண்ட குழு ) என்னிடம் முதல் கட்ட திருவடி தீக்ஷை பெற்றுக்கொண்டனர்
அதில் ஒருவர் மட்டும் ரெண்டு/மூன்றாம் கட்டம் முடித்து விட்டார்
அப்போது நான் தட்ஷணை ஆக வேட்டி – சட்டையும் பெற்றேன் –
அவர்களாகவே எனக்கு பணம் கொடுத்தார்கள்
அப்போது ஆரம்பித்தது இந்த பயணம் – இன்று பீடு நடை போடுது
அப்போது மக்கள் என் பதிவுகள் அதிகம் படிக்க மாட்டார்கள்
என் வலை வருகை செய்பவர்கள் – அதிகம் போனால் 20 நபர் மட்டுமே
இப்போது தான் இது அதிகரித்து 50 – 75 ஆக இருக்கு
இப்போது இந்த பயிற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து – மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை
அதனால் அனேகர் இந்த பயிற்சி கற்றிக்கொள்கின்றார்
எனக்கே வியப்பு தான்
எப்படி இந்த நல்ல மாற்றம் – முன்னேற்றம் ??
புரியவிலை
நான் நேரில் தான் தீக்ஷை கொடுத்துக்கொண்டிருக்க – முதலில் அமெரிக்கா சேர்ந்த தமிழ் நண்பர் – அலைபேசியில் கேட்க , னான் மறுத்து விட்டேன்
பின் – அனேகர் இம்முறையில் கேட்க , வேறு வழியில்லாமல் – அதுக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்
இதை முதலில் வாங்கியவர் – வளைகுடா நாடு வாழும் இந்தியர் – கிறித்தவர்
பின்னர் இதை பார்த்து – அனேகர் கேட்க , நான் கொடுத்தேன்
லண்டன் – ஃப்ரான்ச் – ஆஸ்திரேலியா அன்பர்கள் பெற்றனர்
நேரில் வந்தால் நான் பூஜை சாமாங்கள் – + என் தட்ஷணை ஆக ரெடிமேட் Pant + shirt தான் வாங்குவது
இது முதலில் வேட்டி + சட்டை ஆக இருந்தது
அது மிக அதிகமாக போகவே – Pant + shirtக்கு மாறினேன்
இம்முறை நேரில் பெறுபவர்க்கு சரி – அலைபேசியில் பெறுபவர்க்கு எப்படி ??
அதான் அவரை பணமாக கொடுக்கும் படி சொல்லிவிட்டேன்
மேலும் என்னிடம் மிக அதிக எண்ணிக்கையில் Pant + shirt சேர்ந்து விட்டபடியால் – அதை வைத்துக்கொண்டு என் செய்வதென – பணம் கொடுக்கும்படி சொன்னேன்
நான் ” இந்த தீக்ஷை தக்ஷணையில் வாழ்க்கை நடத்தவிலை என்பது உண்மை ”
அதனால் நான் இதை பெரிது படுத்தவிலை – ஆனால் மக்கள் – சன்மார்க்க அன்பர்கள் இதை ஊதி பெரிது படுத்தி விட்டார்கள்
இப்போதும் நேரில் பெறுவோரிடம் Pant + shirt தான் பெறுகிறேன்
துணி ஆடைகள் மிக அதிகமாக சேர்ந்திருக்கு எனினும்
– இம்முறை கடைபிடிக்கிறேன்
இலவசமாக கற்றுக்கொடுக்கிறேன் – விபாசனா தியானம் – எல்லார்க்கும் – குறிப்பாக வயது மூத்தோர் – பணி நிறைவு பெற்றோர்க்கு
என் பயிற்சி முறை
முதல் நிலை – ஆரம்ப நிலை
ரெண்டாம் நிலை –
மூன்றாம் நிலை
என வகுத்து அதை கற்பித்து வருகிறேன்
அதிகம் பெறுவோர் – செல்வராஜ் குழு + வாசி பயிற்சியாளர் தான்
அவர்க்கு திருவடி எப்படி பயன்படுத்துவதென தெரியவிலை
பயிற்சி விவரம் :
திருவடி தீக்ஷை விவரம்
கட்டம் 1
கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம்
கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல்
இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம்
இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும்
கட்டம் 2
இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது??
கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும்
மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்
எட்டிரண்டு
முத்தி சித்தி விளக்கம்
சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு
னெற்றிக்கண் திறப்பு
சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல்
பொற்சபை சிற்சபை
முழு நிலவு – அமுத உற்பத்தி
திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்
கட்டம் 3
எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும்
எலும்பு கொண்டு எப்படி
1 ஒளி தேகம் அடைவது ??
2 வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது
3 காலம் கடக்கும் விதம்
இது தான் உண்மை நிலவரம் – நடந்தது
வெங்கடேஷ்