“ அறிவு நிலைகள்”
ஞானப்படி ஏறியவன்
ஞானப்படி ஏறாமல் சடங்கில் நிற்பவன்
முதலாமவன் ஞானி
ரெண்டாமவன் போகி – உலோகாயதன்
1 கோ பூஜை என்றால்
போகி ஒரு கால் நடைக்கு பூஜை செய்கிறான்
ஞானி தன் ஆன்மாவுக்கு பூஜை செய்கிறான்
2 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றால்
போகி புறக் கோவில் கோபுரம் பார்க்கிறான்
ஏமாந்து போகிறான்
ஞானி தன்னுள் பிரணவக் கோபுரம் பார்க்கிறான்
3 பூரணக் கும்ப கலசபூஜை என்றால்
போகி உலோகத்தால் செய்த கலச பூஜை செய்கிறான்
ஞானியோ பிரணவம் அமைத்து பூஜை செய்கிறான்
இது தான் அறிவு நிலைகள்
அறிவின் படி நிலைகள்
வெங்கடேஷ்