சமயமும் சன்மார்க்கமும்
சமயம் :
நம் இந்து மத கோவில் மூலஸ்தானத்தில் , லிங்கத்துக்குப் பின்னால் ஒரு பிரபை வைத்திருப்பர்
அதன் நடுவே அகல் விளக்கு – அதன் சுடர் – பிரகாசம் பல கண்ணாடி சில்லுவில் பிரதிபலிக்கும்
அதாவது தெய்வம் ஒளி எல்லா அண்டங்களிலும் ஒளி வீசுது என்பதாம்
சன்மார்க்கம் :
இந்த ஏற்பாட்டை வள்ளல் பெருமானும் – தன் சத்திய ஞான சபையில் செய்திருந்தார்
ஜோதிக்குப் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்திருந்தார்
அது வெட்ட வெளி அம்சமாகும்
அதுவும் இந்த பொருளில் தான் வைத்திருந்தார்
அது எதுக்கு வைத்துள்ளார் என்பதை அறியாமல் திருப்பணி குழு எடுத்து வெளியே வீசி விட்டது
அதாவது ஆன்ம /சிவ ஒளி எல்லா அண்ட சராசரத்திலும் வீசுது
அதனால் ரெண்டும் ஒரே கருத்தைத் தான் கூற வருது என்றால் அது தப்பல்ல மிகையுமல்ல
உடன் நம் சன் கிளிகள் :
சமய மதம் பொய் என ஆதியில் உரைத்திட்ட அபெஜோதி என பாட ஆரம்பித்துவிடுவார்
ஐயோ பாவம்
வெங்கடேஷ்