“ சாலை ஆண்டவர் – மெய் வழி நூல் “
“ எட்டிரெண்டு “
எட்டிரெண்டு பத்தானவிடம் காணாதார்
எட்டியெட்டிப் பார்த்தாலும் எட்டித் தள்ளும்
அதாவது , எட்டிரெண்டு ஆகிய “சிவ “ அனுபவத்தை கை வரப்பெறாதவர் – பத்தாம் வாசல் ஏறாதவர் – இதன் பொருளை சரியாக அறியாமல் தவறாக பயின்றால் , ஒரு அனுபவமும் கிட்டாமல் போகும் என்றவாறு
எட்டிரெண்டு மிக பெரிய ரகசியம்
அது
அ உ அல்ல
இரு கண் அல்ல குமரி சிவ செல்வராஜ் விளக்குவது போல்
சாலை அன்பர்கள் கற்றவர்கள் என்னிடம் பகிர்ந்த விஷயம் :
1 சாலை ஆண்டவர்
இயற் பெயர் : காதர் பாட்சா – முஸ்லிம்
2 அவர் குரு தணிகைமணி பிரான் :
இயற் பெயர் : அபு சாலிக் – முஸ்லிம்
இருவரும் இந்துமதத்துக்கு மாறி ?? ( ஆஹா ) இங்கிருக்கும் யோக ஞானம் பயின்று அனுபவத்துக்கு வந்து – பல நூல்கள் படைத்துள்ளதாகவும் கூறினர்
1 பிள்ளைத் தமிழ்
2 முரிது சுருக்கம்
3 ஐமணி பொதிகை
4 பூரண புதையல்
இவர்கள் நான் பல சித்தர் பாடலுக்கு விளக்கம் அளிக்கையில் சாலை ஆண்டவர் பாடலுக்கு அளிப்பதிலை என்ற போது – என்னிடம் பாடல் இலை என்றேன்
அவர் நூல் அனுப்பி வைத்தார்
அதிலிருந்து இந்த விளக்கம்
படித்துப்பார்த்ததில் , பாடல்கள் உண்மை விளக்குவதாக இருக்கு
பெரிய ரகசியத்தையும் கூறுகிறார்
வெங்கடேஷ்
பாடல்கள் படித்துக்கொண்டிருக்கேன் – பதிவாக வரும்