விலாசம் இப்படித்தான் தேடணும்
உண்மை சம்பவம் – 2010
எங்கள் சென்னை வீட்டில் குடி இருந்தோர் – செங்கல்பட்டில் தனி வீடு வாங்கி செல்லவே – அவர் எனை தங்கள் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டபடியே இருந்தார்
நானும் சென்றேன்
விலாசம் மறந்துவிட்டேன் – பாதி மறந்து /தெரிந்து இருந்ததால் குழப்பம்
அங்கு விசாரித்தேன் – யாரும் தெரியாது என்றார்
அது சின்ன காலனி – நகர் மாதிரி
சரி என ஒரு கல்லூரி மாணவரிடம் : இவர் வீட்டில் இரு அழகான பெண்கள் உள்ளார் . அவ்ளோ தான்
அவர் பேர் – எங்கு படிக்கிறார்
அவர் தந்தை தாயார் பெயர் எல்லாம் கொட்டிவிட்டார்
எனக்கு தெரிந்து தான் அவ்வாறு கேட்டேன்
நேரடியாக அவர் வீட்டுக்கு சென்று விட்டுவிட்டார்
நான் நன்றி கூறினேன்
எப்படி ?? விலாசம் கண்டுபிடிப்பது என கண்டுபிடித்துவிட்டேன்
வெங்கடேஷ்