“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே 295
விளக்கம் :
சுழுமுனை நாடி பற்றி தவம் செய்து உச்சி ஏறாதவர் , குணத்தில் பிறழ்ந்து போவர்
சுழுமுனை நாடி மெல்லிய நூல் போன்றிருக்கும்
அதனால் அதனுள் மேலேறும் வாசியானது மெல்லிய பூங்காற்று
நாடி பற்றி தவம் ஆற்றில் இந்திரியப் பறவைகள் மாண்டு விடும்
உலக மக்கள் மாயை எனும் மயக்கத்தில் இருக்கின்றார்
இந்த நூல் தான் சாலை ஆக உருவகம் செயப்பட்டுளது
அதன் நுனியில் விளங்கும் ஆன்மா தான் ஆண்டவர்
அது தான் சாலை ஆண்டவர்
வெங்கடேஷ்