அன்பர் சந்தேகம்
உண்மை சம்பவம் – ஜீன் 2022
ஓருவர் என் பதிவு
பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை ஆசிரியரும் என்ற பதிவு படித்து விட்டு , நீங்க எப்படி என தொலைபேசியில் கேட்டார்
நான் :
பத்தாம் வகுப்பு ஆசிரியருக்கு மேலே
பல்கலை ஆசிரியருக்கு கீழே
பத்தாம் வகுப்பு ஆசிரியர் மாதிரி :
8 & 2 = இரு கண் என விளக்கம் அளிக்க மாட்டேன்
வாலை கண்ணில் இருக்கு என கூற மாட்டேன்
மனோன்மணியும் வாலையும் ஒன்றென தவறாக விளக்கம் அளிக்க மாட்டேன்
எல்லாவற்றுக்கும் சரியான விளக்கம் – பயிற்சி அளிப்பேன்
ஆனால் பல்கலை ஆசிரியர் அளவுக்கு சூக்கும நிலையில் இருந்து பயிற்சி அளிக்கும் அளவுக்கு முன்னேறவிலை , நெற்றிக்கண் திறந்து கொளவிலை
ஆனால் அதற்கான பயிற்சியில் இருக்கேன்
நல்ல அனுபவனும் கூட
இது தான் என் நிலை
அவர் : உங்களைப் பொறுத்த வரை குரு யார் ??
நான் : யார் ஆன்ம நிலை/ அனுபவம் பெற்றிருக்காரோ அவரே குரு
யார் ஆன்ம தேகம் எனும் சுத்த தேகம் பெற்றிருக்காரோ அவரே குரு
நான் இந்த முயற்சியில் இருப்பவன்
I am a saint in the making
அவர் சிரித்தபடி பேசியை வைத்துவிட்டார்
வெங்கடேஷ்