“ திருமந்திரம் – பிரணவம் பெருமை “
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.
விளக்கம் :
ஊமை = மெய் எழுத்து ம்
பேசும் எழுத்து = உயிர் எழுத்து அ , உ
இந்த ரெண்டும் இணைந்தால் – பிரணவமாகிய ஓம் அமையும்
அதனால் உள்ளொளி ஆகிய மூலாக்கினி உதயமாகும்
அந்த அனுபவத்தால் தற்போதம் இழப்பு ஆகும்
நம்மை நாம் இழப்போம்
அசைவு ஒழியும் .
அதனால் ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆகும்
வெங்கடேஷ்