அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 61
என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே
பொருள் :
தான் கண்ட காட்சி என்னவென சொல்வது ?? என வினவுகிறார் வள்ளல் பெருமான்
அது சொல்வதுக்கும் நினைப்பதுக்கும் தாண்டி விளங்குது
அது சித்தத்தின் முடிவான நடமும், வேதத்தின் முடிவான நடமும் – தொடக்கம் முடிவு இல்லா பொது வெளியில் நடமிடும் ஜோதி தான் கண்டேன் – அது இன்பம் கொடுக்க வல்லதாய் – ஒன்றாய் – ரெண்டாய் – ஒன்றிரண்டி இல்லாததாய் – ஆனால் எல்லாம் செய வல்லமை உடையதாய் விளங்கி – தன் நிலை கடந்தும் – தன் வெளி கடந்தும் – எல்லாம் ஒன்று என சமரஸம் ஓங்கும் எல்லாவற்றின் முடிவிலும் தனித்து னடமும் தான் கண்டேன் எங்கிறார் வள்ளல் பெருமான்
அது தனியான சுகம் நல்கும் பெருவெளியே
வெங்கடேஷ்