“ வளர்ச்சிப் பணிகளும் – நம் வாழ்க்கையும் “
ஒரு வீட்டில்
வெறும் சுண்ணாம்பு வர்ணம் அடித்தாலே
4 /5 நாளைக்கு வீட்டு நிலை – களேபரமாக இருக்கும்
பொருட்கள் கலைந்து சிதறி கிடக்கும்
தினசரி வேலைகள் பாதிக்கும்
உணவு கூட வெளியே இருந்து தான்
ஒரு நாட்டில் நடந்தால்
மெட்ரோ பணிகள் மேம்பாலம் பணிகள் நடந்தாலும்
மக்கள் சில பல அசௌகரியத்துக்கு ஆளாவர்
இது வாடிக்கை சகஜம்
சில கஷ்டம் பொறுத்தால்
பல வசதிகள் கிடைக்கும் பிறகு
அதே மாதிரி வளர்ச்சிப்பணியாம்
ஆன்ம விடுதலை – ஆன்ம தரிசனம் என்றால்
சிலபல அசௌகரியத்துக்கு ஆளாகணும்
இலை எனில் காரியம் ஆகாது
தூக்கம் உணவு குறையும்
பொழுது போக்கு அம்சம் குறையும்
இதை எலாம் பொறுத்தால் தான் கடவுள் நிலை அடைய முடியும்
வெங்கடேஷ்