திருவடி தவம் – பெருமையும் அற்புதமும்
உண்மை சம்பவம் – 2021
இதை ஏதோ பெருமைக்காக உரைக்கவிலை – உண்மை தான் – மிகைப்படுத்தவிலை
இந்த சம்பவம் உதாரணமாக , நான் தனபால் குறித்து
காஞ்சி சன்மார்க்க சங்க அன்பரிடம் பேசியது
அவர் ; நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் யாரும் நம்புவதாக இலை
அவர் தனபாலை அவ்ளோ நம்புகிறார்
அதை உடைக்கமுடியவிலை
அற்புதம் – மாயா ஜாலம் நடத்திக்காட்டணும் போல
நான் : எனக்கு திருவடி பயிற்சி நன்கு பிடித்துவிட்டது – வேர்விட்டுவிட்டது – நல்ல அனுபவம்
அற்புதம் எலாம் நடக்குது
உதாரணம் :
எனக்கு கண் புரை 2016 லிருந்து வர வேண்டியது – அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது
விஷன் காட்டிக்கொண்டே இருக்கும் – நான் குருடன் போல
உடன் எனக்கு ஒருவர் வந்து கண்ணில் ஒரு கண்ணாடி ( lens ) மாற்றிவிட்டு சென்றுவிடுவார்
நானும் அறுவை சிகிச்சை செய்யாமல் 5 ஆண்டு கடத்தி விட்டேன்
நான் மற்றவர் போல் நிறைய மருத்துவம் பார்க்காமலே அருள் திருவடி காப்பாற்றிய வண்ணம் இருக்கு என்றேன்
அவர் : இந்த நிறைவு தான் வேணும் – நல்லது – மகிழ்ச்சி
வெங்கடேஷ்