“ கண்ணாடி தவம் “
இந்த பயிற்சி பத்தி பேசினாலே , மக்கள் ஏளனம் கேலி செய்கிறார்
கண்மணி குரூப் ?? என கேலி கிண்டல் செய்வர்
வள்ளல் பெருமான் கூட தன் 12 வயது முதல் இந்த பயிற்சியை சென்னை 7 கிணறு வீதியில் வீட்டில் மேற்கொண்டார் என்றவுடன் வாய் மூடிக்கொள்கிறார்
வரலாறு கூட , வள்ளலார் தன் அண்ணியாரிடம் ஒரு கண்ணாடி அகல்விளக்கு வேணும் என கேட்டதாக சொல்கிறது
இப்போது பரவாயிலை மக்கள் மத்தியில் இது பிரபலம் ஆகிவிட்டது – விழிப்புணர்வு வந்துவிட்டது
இந்த கண் / கண்ணாடி தவம் பிரபலப்படுத்தியதன் பெருமை
மீஞ்சூர் ஜோதி குரு சபை /குமரி தங்க ஜோதி சபை செல்வராஜ் ஐயாவை சேரும்
எனினும் இதை சன்மார்க்க உலகம் ஏற்பதே இலை , கண்டு கொள்வதே இலை – வள்ளலாரே செய்திருந்த போதும்
மூத்த சன்மார்க்கிகள் – வள்ளலார் இணையதளம் vallalarspace கூட இதை ஒப்புக்கொள்வதிலை
உண்மை சத்தியத்தை யார் ஒப்புக்கொண்டால் என்ன ?? ஒதுக்கினால் என்ன ??
நட்டம் அவர்க்குத் தான்
ஏன் ??
விளங்காத புதிர் தான்
வள்ளலார்க்கு தெரியாதது , நம் அன்பர்க்கு தெரிந்திருக்கு – அப்படித் தானே ??
உரை நடையில் கூறி இருப்பதை யாவும் ( தயவு / ஜீவகாருண்ணியம் – சோறு போடுதல் மூலமாக இதை செய்கிறார் – சத்விசாரம்) கடைபிடிப்பதாக கூறிக்கொளும் அன்பர்கள் ,
இந்த பயிற்சி பத்தி ஏன் வாய் திறப்பதிலை ??
வள்ளலாரே இதை செய்திருக்கார் எனும் போது ? நாமும் செயலாம் என்ற எண்ணம் தோன்றவிலையே ??
புதிர் தான்
சில குழுக்களுக்கு இது என்ன மாதிரியான பயிற்சி ?? உண்மையா பொய்யா ?? என விளங்காமல் குழம்பி தத்தம் குருவை துளைத்து எடுக்கிறார்
இது பத்தி விளக்கவும் – இதை நீங்களும் கற்றுத் தருவீரா ?? என கேட்டு வருகிறார்
நல்ல வேடிக்கை தான்
வெங்கடேஷ்