“ தாமரை “ – சிறப்பு
இது ஆசீவகம் எனும் தொன்மை தமிழ் வாழ்வியலின் சின்னம் ஆம்
இதை ஏன் வைத்துள்ளனர் எனில் ?
- தாமரை – இரவில் குவிந்து விடும் – அஞ்ஞான இருள் ஆதலால் – ஆனால் காலையில் சூரியன் கண்டு மலர்ந்துவிடும்
சூரியன் – ஞானம் குறிப்பது – ஆன்ம ஞானம்
- அது நீரில் ஒட்டாமல் நிற்கும் – அதாவது புறச் சூழலால் பாதிப்பு அடையாமல் இருக்கும்
- அதன் உயரம் குளத்தின் நீர் உயர உயர உயர்ந்து கொண்டே போகும்
அதாவது உலகத்தில் கெட்ட – துன்ப துயர் சம்பவங்கள் வருவது இயல்பு – அதெல்லாம் தாங்கி – துவழாமல் தங்கள் குணத்தால் பிறழாமல் மேன் மேலும் சிறக்க வாழ வேண்டும் என்ற பொருள் படுவதால் இந்த சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
அதனால் இத்தகைய உயரிய தாமரை மீது தெய்வங்கள் அமர்ந்து இருப்பதாக உருவகம் செய்துள்ளனர் நம் முன்னோர்
வெங்கடேஷ்