“ வாசியும் – விட்ட குறையும் தொட்ட குறையும் “
உண்மை சம்பவம் – 2021
26 வயது பொறியியல் பட்டதாரி
சென்ற வாரம் , என்னிடம் தொடர்பு கொண்டு :
தானாகவே திராதகம் பயிற்சி மேற்கொண்டதாகவும் , மேலும் சில பயிற்சிகள் செய்த தாகவும் கூறினார்
3 மாதம் செய்ததாக கூறினார்
அதனால் , இப்போது தனக்கு வண்டு சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கு
தன்னால் வழக்கமான பணி செய்யமுடியவிலை
என் செய்வது ??
எப்படி நிறுத்துவது ??
வாசி உண்டாகிவிட்டதா ??
என்ன அனுபவம் ?? என்றெலாம் வினவினார்
மேலும் தச நாதத்தில் பல நாதங்கள் கேட்டுவிட்டார் அவர்
ஓங்காரம் கூட கேட்டுவிட்டார்
வியப்பு தான்
பலர் – பல்லாண்டு தவம் கிடக்கார்
இவரோ 3 மாதத்தில் எல்லாம் முடித்துவிட்டார்
நான் :
இது வாசி அனுபவமே
நாதம் உண்டாகிவிட்டது
ஆனால் எப்படி இந்த பயிற்சியில் விளைந்தது ?? இவ்ளோ குறுகிய காலத்தில் அனுபவம் சித்தித்தது என்பதுக்கு பதில் அளிக்க இயலாது
இது முற்பிறவியில் செய்த தவத்தின் தொடர் அனுபவமே இவ்ளோ எளிதில் சீக்கிரத்தில் வாசி வசம் ஆகியிருக்கு என்றேன்
சிலர் 60 ஆண்டுகள் / 30 ஆண்டுகள் சாதனம் செய்தும் இன்னமும் வாசி சிக்காமல் தவிக்கும் போது , இந்த மாதிரி சம்பவம் நடப்பது வியப்பு தான் எனினும் , அது விட்ட குறை – தொட்ட குறையினால் தான் நடக்கும் என்றேன்
நான் அவர் கூறுவதை கேட்டு அதிர்ந்து விட்டேன்
எப்படி இறையின் திருவிளையாடல் ?
வெங்கடேஷ்
Tirusittrambalam
LikeLiked by 1 person