ஞானம் தேடுவோர் எப்படி ??
தோல் வியாதி உடையோர் மிக சிரமப்படுவர்
ஏனெனில் இதில் தேர்ந்த மருத்துவர் அதிகமிலை
முன்பு சென்னையில் எழும்பூரில் ஒருவர் இருந்தார்
( Dr Thambaiah in Egmore )
அவர்க்குப் பின் சென்னையில் கை தேர்ந்தவர் யாருமிலை
அதனால் தான் அந்த நோயாளியர்
எல்லா ஊர் தோல் நோய் நிபுணரிடம் செல்கிறார்
எல்லா ஊருக்கும் ஒரு சுற்று சுற்றிவருவார்
அதே மாதிரி தான்
யோகம் ஞானம் தேடுவோரும்
பலப் பல ஆண்டுகளாக தேடி அலைந்து
பலப் பல குருவிடம் சென்று பயின்று வருவார்
ம வ கலை மன்றம் – வாழும் கலை – குமரி செல்வராஜ் – சாலை
ஈஷா – சித்த வித்தை – பாட்டு சித்தர் – கோவை கவநகர் ஐயா
ஒரு ஒரு சுற்று சுற்றிவருவார்
பெரும்பாலும் பயிற்சி இருக்காது – வேத நூல் ஓதச் சொல்வார் அவ்வளவே
பின் தான் எது சரியான பயிற்சி கண்டுபிடிப்பர்
ஏமாந்த பின் தான் கண்டுபிடிப்பர்
அதுக்குள் காலம் காசு சக்தி வீண்
எந்த பயிற்சிக்குப் பின் வேறெந்த பயிற்சிக்கும் செல்லவிலையோ ?
அது தான் சரியான உண்மையான பயிற்சி
வெங்கடேஷ்