“ குரு பெருமை “
குடும்பத்தில் கல்யாணம் முடிவானது
பணம் புரட்டுவதில் சிக்கல்
எங்கெங்கோ அலைந்து திரிந்து புரட்ட பார்க்கின்றார்
ஆனால் முயற்சி பலிதம் ஆகவிலை
அப்போது ஒருவர் வந்து அவர் கேட்டதை விட
அதிகமாகவே கொடுத்து உதவினால் எப்படி இருக்குமோ ??
அப்படித் தான் குருவும்
சீடன் /உண்மை மெய்ப்பொருளைத் தேடுவோர்
எங்கெங்கோ திரிந்து திரிந்து பல்லாண்டுகள் தேடுகிறார்
இமயமலை கூட சென்று தேடுகிறார் சிலர்
ஆரும் சரியான வழி காட்ட விலை
மெய்ப்பொருள் உரைக்கவிலை
மனம் அடங்கும் திறம் உரைக்கவிலை
அப்போது அவர் தேடும் ஒருவர் கிடைக்கிறார்
அவர் எல்லா விஷயத்தையும் ஞானப்பொருள் எடுத்துரைக்கிறார்
அவர் எதிர்பார்த்த தேடிய எல்லா பொருளையும் விரித்துரைக்கிறார்
எப்படி இருக்கும் ??
அவர்க்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும் ??
எல்லையற்ற மட்டற்ற மகிழ்ச்சி
இது சத்குரு பெருமை
வெங்கடேஷ்