On a lighter note – part 3
உண்மைச் சம்பவம் – கோவை
நான் அவினாசி சாலையில் நின்று கொண்டிருந்தேன்
அப்போது ஒரு சிறுமி வந்து ” அங்கிள் – இந்த பள்ளி எங்கிருக்கின்றது ?? என்று வினவினாள்
நான் நேராப் போய் – இடது கை பக்கம் திரும்பு என்றேன்
அவள் விழித்தபடி நின்றாள்
நான் புரிந்து கொண்டு ,” நேரா போய் லெஃப்டில் திரும்பு ” என்றேன்
அதுக்கு அவள் இப்படி தமிழில் சொல்லுங்கள் என்றாளே பார்க்கலாம்
லெஃப்ட் – ரைட் எல்லாம் தமிழ் ஆகி ரொம்ப காலமாகி விட்டது
தமிழ் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது
பாரதியின் தீர்க்கதரிசனம் உண்மை ஆகிவிடும் போல் தெரிகிறது
வெங்கடேஷ்