காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
ஆகுமே அறிவைவிட்டார் சலனத்தாள்வார்
அவ்வாசி யோகம்விட்டார் சித்திவிட்டார்
போகுமே எனைவிட்டார் சாஸ்திரம் கெட்டார்
பொய்கெட்டார் மெய்யாவார் புழுக்கையாகார்
ஏகுமே உயிர்விட்டார் மயானம் தொட்டார்
எல்லாரும் தொட்டாரோ அச்சமில்லார்
ஓகுமே கண்ணீரே வடிதல் சொந்தம்
ஊழ்வினையென் றிடிப்பாரே துடிப்பினாலே
விளக்கம் :
யார் அறிவின் துணையில்லாமல் இருக்காரோ அவர் மனதின் சஞ்சலத்துக்கு ஆட்படுவார்
வாசி யோகத்தை விட்டால் சித்தி விட்டதுக்கு சமானம்
என் நூல்கள் பாராமல் ஆயாமல் விட்டோர் சாஸ்திரம் படிக்காததுக்கு சமானம்
மாய்கை விட்டோர் மெய் ஆகிய ஆன்மா சேர்வார் – மரணித்து நீறாகார்
உயிர் நீத்தோர் தான் மயானம் அடைவர்
கண்ணீர் வடிக்கின்றோர் – எல்லாம் முன் ஜென்ம வினை என புலம்புவர் இறுதியில்
வெங்கடேஷ்